கலந்துரையாடல் இன்று ஐனாதிபதியின் ஆலோசகரும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு அமைந்துள்ள ஐனாதிபதியின் ஆலோசகர் செயலகத்தில் நடை பொற்றது.
வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, கிரான் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்குடா வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்படுத்தலும் க.பொ.த(சா/த) க.பொ.த(உ/த) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கும் பாடரீதியிலான பெறுபேறுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் முன்னால் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்அவர்களும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஐh உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ,பொருளாளர் தேவராஐh தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்,பிரதித் தலைவர் யோகவேள் உள்ளிட்ட அனைத்து கல்குடா வலயக் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நிலையில் மிகவும் பின் தங்கிய பகுதியாகவுள்ள கல்குடா வலயத்தின் கல்வி நிலையை உயர்வான நிலைக்கு கொண்டுவரும் நிலையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
