மட்டக்களப்பு புளியந்தீவு தூய மரியாள் பேராலய திருவிழாக் இறுதி நாள் கூட்டுத்திருப்பலி இன்று ( 15.08.2013) வியாழக்கிழமை இடம்பெற்றது.
நேற்று புதன்கிழமை (14.08.2013) மாலை மரியாளின் துதிபுகழ் ஆராதனை மற்றும் நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்று விண்ணேற்பு அன்னையின் திருச்சுரூப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சென்றல் வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, செபஸ்தியான் வீதி , சென் மைக்கல் வீதி மற்றும் புனித அந்தோனியார் வீதி வழியாக பேராலயத்தை சென்றடைந்தது.
இன்று காலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையை அருட்தந்தையர்கள் சகிதம் ஆயர் இல்லத்திலிருந்து பங்கு மக்களினால் வரவேற்று பவனியாக அழைத்து வரப்பட்டார்.
திருவிழாக் கூட்டுத்திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் தலைமையில் பேராலய பங்குத்தந்தை ஜே.எஸ். மொறாயஸ், தந்தையர்களான கிறைட்டன் அவுட்ஸ்கோன் மற்றும் பிறைனர் ஆகியோர் திருவிழாக் கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
கூட்டுத்திருப்பலியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.
கடந்த 06.08.2013 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்தடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.