அமிர்தகழி கண்ணிகியம்மன் புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பின் மிகவும் பழமைவாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கம் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகி அம்மன் புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

ஆலய தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று கல்வைக்கும் நிகழ்வு அதிதிகள் மற்றும் ஆலய தலைவரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த கண்ணகி ஆலயங்களுல் பண்டைய பூசை முறைகளைக்கொண்டதாக மாமாங்கம் கண்ணகியம்மன் ஆலயம் இருந்துவருகின்றது.

ஆலயத்தின் பிரமாண்டான முறையில் அமைப்பதற்கு கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனான முல தளத்துக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஆலய பரிபாலசபை உறுப்பினர்கள்,ஆலயங்களின் தலைவர்கள்,கிராமத்தலைவர்கள்,பக்தர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.