இன்று காலை ஆரம்பமான கிழக்கு மாகாண விளையாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு றெவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார விiளாட்டு மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண விiளாட்டுத்திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் கிழக்கு மாகாண விiளாட்டு விழாவை கிழக்கு மாகாண சுகாதார விiளாட்டு மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், மற்றும் அமைச்சின் பணி;ப்பாளர், மாகாண விளையாட்டுதிணைக்களத்தின் பணி;ப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் மாகாண விiளாயட்டு வீரர்களின் அறிமுக வைபவம் நடைபெற்றதுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் 2012ம் ஆண்டு தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த விளையாட்டுவீரர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.