பாலமீன்மடுப் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்டு(PHOTOS)

(சசி ஜதாட்சன்)

மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தை மட்டக்களப்புப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேசத்தின் பேரில் அப் பகுதியைச் சேர்ந்த மூன்றுபேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மீட்டக்பட்ட சடலம் 175/2 புதிய எல்லை வீதி பாலமீன்மடுவில் வசிக்கும் சுந்தரலிங்கம் சுமன் (23வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 9.00மணிக்கு கோயிலுக்குச் செல்வதாகச் வீட்டில் இருந்து புறப்பட்ட சுந்தரலிங்கம் சுமனே இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(படம்:லியோன்)