எமது சாதனை கலைஞன் கோவர்த்தனின் இரண்டாவது குறும்பட இறுவட்டு வெளியீடு மட்டக்களப்பில்

(கிருஸ்ணா)

இந்தியாவில் கற்றுவரும் மட்டக்களப்பை சேர்ந்த இளம் இயக்குனர் கோவர்த்தனின் இரண்டாவது குறும்படமாக வெளிவரும் CHECK MATE இன் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.


மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு இதன் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் சினிமாத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் பல வெற்றிகளை குவித்த மட்டக்களப்பை சேர்ந்தவரும் இந்தியாவின் முன்னணி இயக்குனருமான பாலுமகேந்திராவின் பட்டறையில் கோவர்த்தன் இயக்குனர் பயிற்சியை சிறந்த முறையில் பெற்றுள்ளார்.

இதன் வெளிப்பாடாக கோவர்த்தன் வெளியிட்ட முதலாவது குநற்திரைப்படமான “நானும் ஒரு தாய்”வெளியீடு இந்தியாவில் ஏழு விருதுகளையும் இலங்கையில் தேசிய ரீதியில் விருதையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் பத்மநாதன்(தயாமோட்டர்ஸ்)இன் புதல்வராவார்.இவர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்து பட்டப்படிப்பினையும் நிறைவுசெய்துள்ளார்.

இத்தனை சிறப்புக்கொண்ட எமது மண்ணைச்சேர்ந்த ஒரு கலைஞனுக்கு எமது ஆதரவினை தெரிவிக்கவேண்டியது எமது கடமையாகும்.

எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து ஆதரவு வழங்குவோம்.இந்த வெளியீட்டு நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை எமது “மட்டு.நியுஸ”; இணையத்தளம் வழங்குகின்றது.