மட்டக்களப்பு கிரான் கிழக்கு பிரதேசத்தில் உள்ள இந்து மயானத்திற்கான சுற்று மதில் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இதற்க்கான அடிக்கல்லை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி மதில் அமைப்பதற்க்காக முதற்கட்டமாக ருபா 5இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இப் பகுதிக்கான பிரதேச சபைகளே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால் சபைகளில் நிதி பற்றாக் குறை காணப்படுவதனால் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலமை காணப்படுவதாக தெரித்தார்.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.சவுந்தராஜன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் இனைப்புச் செயலாளர் மணோகரதாஸ் பேரின்பமலர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



