மட்டக்களப்பு முகத்துவாரப்பகுதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் யுவதியொருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சேற்றுக்குடாவினை சேர்ந்த பெண்னொருவம் நிந்தவூர் பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சேற்றுக்குடாவினை சேர்ந்த குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் அரசடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் அதிக நேரம் காத்திருந்துள்ளார்.குறித்த யுவதியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் குறித்த யுவதியை பின் தொடர்ந்துள்ளார்.
இந்தவேளையில் வான் ஒன்றில் வந்த இரு இளைஞர்கள் குறித்த யுவதியை ஏற்றிக்கொண்டு நகரின் பல்வேறு பகுதிக்கும் சென்றுள்ளனர்.இவர்களை குறித்த அமைப்பின் உறுப்பினர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதன்போது வானில் இறங்கிய மூவரும் முகத்துவாரத்தின் வெளிச்சவீடு பகுதியில் இறங்கி அங்கு இயந்திரப்படகு மூலம் கொக்குத்தீவுக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரால் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் யுவதிகள் தமது பண்பாடுகளையும் கலாசாரங்களையும் காற்றில் பறக்கவிடும் செயற்பாடுகள் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறான நிலையில் தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்பு அமைப்பு போன்றவர்கள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது.
