காட்டு யானை வீட்டைத் தாக்கியதால் வீடு எரிந்ததில் வயோதிபர் எரிந்து மரணம்

(சசி ஜதாட்சன்)

வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நொச்சன்டகல்லில் நேற்று இரவு அரவு ஓலைக் குடிசை வீட்டை யானை தாக்கியதால் குப்பி விளக்கில் இருந்த தீ பிடித்ததில் வீடு எரிந்துடன் உள்ளே அகப்பட்ட வயோதிபரும் எரிந்து மரணமடைந்துள்ளார்.

நேற்று இரவு நல்லதம்பி கதிராமத்தம்பி (70 வயது)என்ற வயோதிபர் நெச்சன்டகல்லில் உள்ள தனது ஓலைக் குடிசை வீட்டிற்குள் குப்பி விளக்கை வைத்துக்கொண்டு தூங்கிய நிலையில் அங்கு வந்த காட்டு யானை வீட்டைத் தாக்கிய நிலையில் வீடு வீழ்ந்த போது குப்பி விளக்கில் உள்ள தீ வீட்டில் பிடித்து எரிந்த போது உள்ளே தனியாக தூங்கியவரும் தீயில் எரிந்த மரணமடைந்துள்ளார்.

அயலில் உள்ளவர்கள் வவுணதீவுப் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் நேற்று இரவு சென்ற பொலிஸார் எரிந்த நிலையில் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.