மட்டக்களப்பில் பாடசாலை மட்டத்தில் இன ஐக்கியத்தினையும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
மதர் ஸ்ரீலங்கா நிகழ்வு மூலம் பாடசாலை மட்டத்தில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையில் மதர் ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன ஐக்கியத்தினையும் இனங்களுக்கிடையிலான கலாசார விழுமியங்களையும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
இதனை முன்னிட்டு மாபெரும் உணவுக்கண்காட்சியும் இதன்போது நடத்தப்பட்டதுடன் இந்த கண்காட்சியில் மூவினங்களின் பாரம்பரிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மதர் ஸ்ரீலங்காவின் நிகழ்வுகள் இடம்பெற்றன.
புhடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மூவினங்களையும் கொண்ட கல்வி வலயங்களான பொலநறுவை மன்னம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது இன ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்த நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.