பெண்களுக்கான தேசிய கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு அணி சாதனை படைத்தது

கொழும்பில் நடைபெற்றுவரும் 39ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் சார்பில் போட்டியிட்ட மட்டக்களப்பு அணி 2ஆம் இடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்குமிடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 7ல் உள்ள விளையாட்டு அபிவிருத்தித்திணைக்கள மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியிலேயே மட்டக்களப்பு அணி வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு அணியினரை, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ரி பிரசாத் ஆகியோர் வழிப்படுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு  மாவட்ட அணி முதல் தடவையாக இரண்டாவது இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.