மற்றைய சந்தேக நபரை 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா பெறுமதியான ஆட்பிணையிலும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி விடுதலை செய்துள்ளார்.
இச்சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 90 கிராம் கஞ்சாவை மொத்தமாக 180 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.