விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களின்"வான வில்லின் வர்ணங்கள்" நிகழ்வுகள்

(யனோபன்)

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழருவி கலாசார விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களின் "வான வில்லின் வர்ணங்கள்" என்னும் நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

இந்த நிகழ்வின் வடிவமைப்பு மற்றும் ஆட்ட ஒழுங்கமைப்பினை பேராசிரியர் சி.மௌனகுரு மேற்கொண்டிருந்ததுடன்,பிரியதர்சினி ஜதீஸ்வரன், கே.மோகனதாசன், ரி.ஜீவினி, எம்..ரி.ஆன்அனஸ்தீன்,புவியாழினி ஆகியோரின் உதவியுடன் நடனம் மற்றும் இசை ஆற்றுப்படுத்துகை நிகழ்வாக இது இடம்பெற்றன.

மாரி,காளி அம்மன் கோவில்களில் பாடப்படும்
சடங்குப் பாடல்கள்
* பறைமேள முழக்கம் 
* மேளங்கள் பேசுகின்றன (தோல் வாத்தியங்களின் சங்கமம்)
* சக்திமிக்க பரத நாட்டியம் 
* மட்டக்களப்பின் வீரியம் மிக்க வடமோடிக்கூத்து ,அரசர் ஆட்டம்,
ஹனுமார் ஆட்டம்
*கூத்துத் தாளக்கட்டுக்கு கண்டிய நடனம் 
* பன்மையின் ஒருமை (கூத்துத் தளக்கட்டில் இணையும் பரதமும் கண்டிய நடனமும்) ஆகிய நிகழ்வுகளைக்கொண்டதாக வான வில்லின் வர்ணங்கள் என்னும் கலை நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.

வானவில்லில் பல நிறங்கள். இலங்கைப் பண்பாட்டிலும் பல பிரிவுகள்.வானவில்லின் அழகு அதன் ஏழு நிறங்களால் உருவாவது போல இலங்கையின் மானிட அழகு அதன் பல்லினப்பண்பாட்டால் உருவாகியுள்ளது என பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.

இவற்றினிடையே பொதுத் தன்மைக்களுமுண்டு வேற்றுமைகளுமுண்டு
பொதுத் தன்மைக்களும் வேற்றுமைகளும் கலந்ததுதான் பண்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

நாம் பொதுத் தன்மைகளைக் கொண்டாடுவோம்,தனித் தன்மைகளைப் பேணுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.