அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக விமலநாதன் நியமனம்

அம்பாறை மாவட்ட மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த கே.விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் தனது கடமையினை அவர் பொறுப்பேற்றுக்கொண்டதாக அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்தது.

கிழக்கு பிராந்திய பிரதி தபால் மா அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் கடமையாற்றியவந்த நிலையிலேயே அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று வருடமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்தவேளையிலேயே தபால் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.