மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30மணியளவில் செங்கலடி,ராமேஸ்புரம் என்ற பகுதியில் உள்ள வீட்டில் த.அனுஸியா(35)என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் உன்னிச்சைப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றுவதாகவும் உயிரிழந்தவரின் கணவன் தபால் அதிபராக கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.