(எம்.எஸ்.நூர்)
கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வாகரை கிறீன் ஸ்ட்டார் விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டு 2013ம் ஆண்டு;க்கான கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக பொதுமக்கள் படையினருக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.
இராணுவத்தின் 23வது படைப்பிரிவு மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்ட சுற்றப்போட்டியின் இறுதிப்போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இறுதிப் போட்டி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகத்திற்கும் வாகரை கிறீன் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.
இதில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. எனப்படும் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா 23வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அத்துல கொடுப்பிலி, 231வது படைப்பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் சுதத்த திலகரட்ண, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர்; மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், உதவி அத்தியட்சகர் உட்பட இராணுவ பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக பிரதிநதிகள், மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் என்.ரி.பாறூக், செயலாளர் பிரதீபன் உட்பட பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் முதலாமிடத்தை பெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாவும், இரண்டாமிடத்தை பெற்ற வாகரை கிறீன் ஸ்டார் விளை ட்டு ககழகத்திற்கு 75000 ரூபாவும், மூன்றாமிடத்தை பெற்ற கோல்ட் பீஸ் விளையாட்டு க்கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டதுடன் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை பெற்ற கழக வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.