தென்னையில் இருந்து பனைக்கான குருணாகல் மட்டக்களப்பு இளைஞர் பரிமாற்றுத் திட்டம்

(சசி ஜதாட்சன்)

தென்னையில் இருந்து பனைக்கு என்ற தொனிப் பொருளிலான இளைஞர் பரிமாற்றுத் திட்டத்திற்கு குருனாகலில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்புக் கிராமத்தில் தங்கியுள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத் திட்டங்களில் ஒன்றான இளைஞர்களினுடாக பரஸ்பர புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி அதனுடான நிரந்தர சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எற்படுத்தும்  இளைஞர் பரிமாற்றுத் திட்டத்தினுடாகவே குருணாகலில் இருந்து 50 இளைஞர் புவதிகள் மட்டக்களப்பழிற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வருகைதந்துள்ளனர்.

வருகை தந்த இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் ,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி,மண்முனைப் பற்று இளைஞர் சேவை அதிகாரி திருமதி பி.பிரசாந்தி,இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி சி.நடேசகுமார் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்இளங்கீரன் ஆகியோர் வரவேற்றனர்.

இவ்வாறு வருகை தந்த இளைஞர் யுவதிகளுகட்கான ஆரம்ப நிகழ்வு நேற்று காலை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமாகிய சி.சந்திரகாந்தன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

5 ஆம் திகதி வருகை தந்த 50 இளைஞர் யுவதிகளும் புதுக்குடியிருப்பில் உள்ள வீடுகளில் தங்கவைத்துள்ள நிலையில் இவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மட்டக்களப்பின் சகல பாகங்களுக்கும் மட்டக்களப்பில் உள்ள 50 இளைஞர் யுவதிகளுடன் சென்று அனைத்து விடயங்களையும் பார்வையிடுவதுடன் மட்டக்களப்பு மக்களின் கலாசாரம் பாரம்பரியங்கள் மொழி பழக்க வழக்கங்கள் என்பனவற்றை அறிந்துகொள்வதுடன் மட்டக்களப்பின் புராதன இடங்களையும் பார்வையிடுவதுடன் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்புக் காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

இதே வேளை மட்டக்களப்பில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் இம் மாத இறுதியில் குருணாகலுக்குச் சென்று இதே இளைஞர் யுவதிகளுடன் அவர்களது வீடுகளில் இருந்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அவர்களது பண்பாடுகளையும் அறிந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.