ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற ஐம்பெரும் விழாவின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"மட்டக்களப்பிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் பலவீனமானவர்களாக உள்ளனர். நான் உட்பட இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்திலேயே இருக்கின்றோம். ஆனால் பலவீனமானவர்களாகவே இருக்கின்றோம்.
ஐரோப்பிய ஒண்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆயிரம் வீடுகளில் ஒரு வீட்டையேனும் முஸ்லிம் பிரதேசத்திற்கு எடுத்துக்கொடுக்கவோ இந்திய வீட்டுத்திட்டத்தில் 12 வீடுகளை மாத்திரமே பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனால் பலவீனமடைந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளாகவே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தி அதனுடாக வீணான சந்தேகங்களை கலைந்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவில்லை.
அண்மையில் வாகனேரி பிரதேசத்தில் இரண்டு சிவில் சமூக விவசாயிகளுக்கு இடையில் இடம்பெற்ற விவசாய நீர்ப்பாசனம் தொடர்பிலான முரண்பாடு தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த போது சில அரசியல்வாதிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பரட்டமொன்றில் ஈடுபட்டனர்
இதேநேரம் மீள் குடியேற்ற கிராமமான உறுகாமத்தில் அண்மையில் முஸ்லிம் வியாபாரியொருவரின் கடை மற்றும் வாகனம் என்பன எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கட்டும் என்று பார்த்ததுடன் இதற்காக நாங்கள் வீதியில் இறங்கி பேரணி நடாத்தவில்லை.
இது சமூகங்களுக்கு இடையில் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்றே நாங்கள் கருதுகின்றோம். எனவே இந்த மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் சமூக ஒற்றுமையையும் கட்டி வளர்க்க நாம் பாடுபட வேண்டும். அதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக மட்ட தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.