த பெட்டில் ஒப் த எவறெஸ்ட் பெரியகல்லாறு மத்திய கல்லூரி வசம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற த பெட்டில் ஒப் த எவறெஸ்ட்(சிகரத்தை நோக்கி)கிறிக்கட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

மூன்றாவது ஆண்டாகவும் இடம்பெற்ற இந்த போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி இரண்டு தடவைகள் வெற்றியை தனத்தாக்கிகொண்டுள்ளது.

பேரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த கிறிக்கட் போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி 45 ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து 220ஓட்டங்களைப்பெற்றது.இதில் விநோதன் 48 ஓட்டங்களையும் ஜர்சா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி வீரரான நிரோன் மூன்று விக்கட்களை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 42.5 ஓவரில் ஆறு விக்கட்களை இழந்து 221 ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கiயெட்டியிருந்தனர்.

இதன்போது தனுராஜ் 61 ஓட்டங்களையும் நிரோன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வீரரான வினோதன் மூன்று விக்கட்களை பெற்றிருந்தார்.

இந்த போட்டியில் மூன்று விக்கட்களைப்பெற்று 52 ஓட்டங்களையும் பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி வீரர் நிரோன் சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதி நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக சிங்கர் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் வரதராஜன்,பட்டிருப்பு கல்வி வலய கணித பாடத்துக்கான உதவி கல்விப்பணிப்பாளர் அன்னநவபாரதி உட்பட ஆலய தலைவர்கள்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.