மட்டக்களப்பில் மீன் விற்பனை நிலையம் திறந்துவைப்பு

இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மட்டக்களப்பில் முதலாவது மீன் விற்பணை நிலையம் நேற்று மாலை சனிக்கிழமை கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியில் கடற்றொழில் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் விற்பணை நிலையத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் கடற்றொழில் நீரியல்வள பிரதியமைச்சர் சரத் குமார கருணாரட்ன, மீள்குடியெற்ற பிரதியமச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்; உட்பட கூட்டுத்தாபன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இபாட் திட்டத்தின் கீழ் பதினெட்டு இலட்சம் ரூபா செலவில் இந்த மீன் விற்பணை நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் விற்பனை நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள பெருமளவான மீனவர்கள் நன்மையடைய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடுவோர் சந்தை வாய்ப்புகள் இன்றி எதிர்கொண்டுவந்த கஸ்ட நிலை இதன் மூலம் நீங்கியுள்ளது.