ஏறாவூரில் வீதிகளில் வீழந்து இறந்த காகங்கள்,நாய்கள்

ஏறாவூர் பிரதேச வீதிகளில் காகங்கள் மற்றும் நாய்கள் பரவலாக இறந்து காணப்படுகின்றன.

வானத்தில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் நிலத்தில் வீழ்ந்ததை சனிக்கிழமை காலை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, தெருநாய்கள் சிலவும் ஆங்காங்கே உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.

வளர்ப்பு நாய்கள் சிலவற்றுக்கு தேங்காய்ப்பால் பருக கொடுத்ததால் அவை உயிர் பிழைத்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷமூட்டப்பட்ட உணவை உண்டு இவை உயிரிழந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.