மட்டக்களப்பு முத்துலிங்க விநாயகர் ஆலய அலங்கார திருவிழா ஆரம்பம்

(லவினேஸ்)

மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள முத்துலிங்க விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஆரம்பமானது.

எட்டு தினங்கள் இடம்பெறவுள்ள ஆலயத்தின் உற்சவத்தில் தினமும் மாலை 6.00மணிக்கு அபிஷேகத்துடன் உற்சவ பூசைகள் இடம்பெற்ற சுவாமி உள்வீதியுலா இடம்பெறும்.

எதிர்வரும் 12ஆம் திகதி சுவாமி வெளி வீதியுலா வருகைதரவுள்ளதுடன் 14ஆம் திகதி காலை விநாயகப்பெருமானின் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.