ஆனந்தசங்கரியின் 80வது அகவை பூர்த்தியும் மாகாணசபை கௌரவிப்பும்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூரத்;தி விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி கிராமத் தலைவரும் முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா) (மு.பா.உ), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) (மு.பா.உ), இ.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வின்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும், 80 அகவை கொண்டாடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எவரும் வருகைதராதது குறிப்பிடத்தக்கது.