நோர்வே தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் -தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் சந்தித்தார்

(எம்.எஸ்.நூர்)

இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் கேட்ஜோ லோசன் இன்று புதன்கிழமை காலை காத்தான்குடிக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை மற்றும் மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலைமை பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் சமகால அரசியல் சூழ் நிலை தொடர்hபகவும் இதன் போது கேட்டறிந்தார்.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எஸ்.சுபைர், மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை, சட்டத்தரணி எம்.உவைஸ், முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எல்.எம்.சரீப், ஓட்டவாடி பிரதேச சபை உறப்பினரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான எம்.ஐ.ஜுனைட் நழீமி, ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறப்பினர் என்.கே.றம்ழான் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.ஜிப்ரி மதனீ உட்பட உலமாக்கள், பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

நோர்வே தூதுவர் கேட்ஜோ லோசன் செவ்வாய்க்கிழமையன்று மட்டக்களப்பில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கத்தை சந்தித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.