தேசிய கல்விக்கல்லூரியில் பராக்கிரமபாகு சிலை திறந்துவைக்கப்பட்டது

(எம்.எஸ்.நூர்)

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இன்று புதன்கிழமை பராக்கிரமபாகு மன்னனின் உருவச்சிலையொன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் கல்வி பயிலும் சமூக விஞ்ஞான ஆசிரிய பயிலுனர்களின் செயற் திட்டத்தின் கீழ் அவர்களினால் வடிவமைக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்ட பராக்கிரமபாகு மன்னனின் உருவச்சிலையே இதன் போது திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் கல்வி பயிலும் சமூக விஞ்ஞான ஆசிரிய பயிலுனர்களின் பொறுப்பு விரிவுரையாளரும் கல்லூரியின் உப பீடாதிபதியுமான எம்.சி.ஏ.ஜுனைத் தலைமையில் நடைபெற்ற இந்த  உருவச்சிலையை திறந்து வைக்கும் வைபவத்தில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா கலந்து கொண்டு இந்த உருவச்சிலையை திற்நது வைத்தார்.

இந்த வைபவத்தில் கல்லூரியின் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் ஆசிரிய பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.