கடந்த காலயத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இக்குளத்தினை புனரமைத்து தருமாறு விவசாயிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பிரதியமைச்சர் விநாயகர் மூர்த்தி முரளிதரன் தலைமையிலான குளவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்து குளத்தினை புனரமைப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சிவலிங்கம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சேதமடைந்துள்ள குளத்தின் பகுதிகளை பார்வையிட்ட பிரதியமைச்சர் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்த குளத்தினை புனரமைப்பதற்காக இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சிவலிங்கம் தெரிவித்தார்.
சிறுபோகத்தில் 200 ஏக்கரும் பெரும்போகத்தில் 1000 ஏக்கரும் இந்த குளத்தின் மூலம் தற்போது விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குளம் திருத்தியமைக்கப்படுவதன் மூலம் இரு போகங்களும் 1500 ஏக்கர் விவசாய செய்கை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.