பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் விளையாட்டுதுறை ஆசிரியர் திருச்செல்வம் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாகவும் இந்த போட்டி இடம்பெறவுள்ளதுடன் கடந்தமுறை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் நல்லதம்பியின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
போட்டியின் இறுதி நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.


