மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கூத்து விழா

(சசி ஜதாட்சன்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண கூத்து விழா மட்;க்களப்பு மகாஜனக் கல்லூரி அரங்கிலும் பயனியர் வீதி திறந்த வெளி அலங்கரிக்கப்பட்ட கலரியிலும் இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வனின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை அகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலை அரங்கில் வசந்தன் கூத்து,பறைக் கூத்து,இசைக் கூத்து என்பனவும் இடம்பெறும் நிலையில் பயனியர் வீதி திறந்த வெளி அலங்கரிக்கப்பட்ட கலரியில் வடமோடி,தென் மோடிக் கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டது.

கூத்து விழாவில் கன்னன்குடாக் கலைஞர்களின் தென்மோடிக் கூத்தும் முனைக்காடு மற்றும் காரைதீவுக் கலைஞர்களின் வடமோடிக் கூத்தும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.