பட்டிருப்பு மாணிக்கம் வீதி புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது

தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு இணைவாக மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு பணிகள் நிறைவுற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுவருகின்றன.

பட்டிருப்பு,மாணிக்கம் வீதி புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பட்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரவீந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதியினை திறந்துவைத்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் இந்த வீதி கடும் சேதங்களுக்கு உள்ளான நிலையில் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந்த வீதியை புனரமைக்கப்பட்டது.

இதற்கா தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 27 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி வசந்தகுமாரன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணனன்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.