வாகரைப்பகுதியில் பெருந்தொகையான ரவைகள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்கேணி கடற்கரைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான துப்பாக்கி ரவைகளை தாம்மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே நேற்று புதன்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை வரை தாம் மேற்கொண்ட தேடுதல் பணியின் மூலம் ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் சுமார் 15 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவைகள் அனைத்தும் வாகரை சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் இவற்றை இப்பகுதியில் மறைத்துவைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.