(சசி ஜதாட்சன்)
வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்விக்கான போக்குவரத்துக்காகவும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பி.பி.டி.ஆர்.ஓ.நிறுவனத்தினால் இன்று உதவி வழங்கப்பட்டது.
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா விடுத்த வேண்டுகோளை அடுத்து சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் அனுசரணையில்பி.பி.டி.ஆர்.ஓ.நிறுவனத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழிலுக்காக தையல் இயந்திரம் மற்றும் காசோலைகள் என்பன வழங்கப்பட்டது.
இப் பொருட்களை பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் வெ.தவராஜா ஊடாக வழங்கிவைத்தனர்.
இந் நிகழ்வில் சிறுவர் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள்,பி.பி.டி.ஆர்.ஓ நிறுவன அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.