தனியார் பஸ்களில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள்

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை-மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் இடப்பட்டிருந்தது.

கல்முனை தனியார் போக்குவரத்து சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பதாகைகள் இடப்பட்டிருந்தது.

மன்னம்பிட்டி விபத்தில் கோட்டைக்கல்லாறை சேர்ந்த சு.உதயகுமார்(சாரதி),சி.தீபலக்ஸன்(நடத்துனர்)ஆகியோரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.