மட்டக்களப்பு,கல்லடி பாலத்தில் முதன்முறையாக விபத்து ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்துவந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்;டியில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் முச்சக்கர வண்டியில் வந்தவர் நாளை இடம்பெறவுள்ள திருமண வீட்டைச்சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கல்லடிப்பாலம் திறந்துவைக்கப்பட்டு நான்கு மாதங்களைக்கடந்துள்ள நிலையில் முதலாவது விபத்தாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.