மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன
பிராந்திய சுகாதார திணைக்களம்,மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்ப வாரத்தினை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம்,அமர்தகழி ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் முருகதாஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரம்ப நடவடிக்கையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி ,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் சிவநாதன்,மட்டக்களப்பு சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் நந்தகுமார்,மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த சுற்றாடல் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியில் டெங்கு ஒழிப்பை நோக்காகக்கொண்டு ஏழு தினங்களும் ஏழு பகுதிகளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகள் இனங்காணகப்பட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர்.

குறிப்பாக பாடசாலைகளில் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாஸ் தெரிவித்தார்.