(சசி ஜதாட்சன்)
வவுணதீவு விபுலானந்த விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது நிறைவை முன்னிட்ட நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மின்னொளிக் கரப்பந்தாட்டப் போட்டியின் போது பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கழகத் தலைவர் .ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற மின்னொளி கரப்பந்தாட்டப் போட்டியில் விருந்தினர்களாக மண்முனை மேற்குப் பிரதேச வெ.தவராஜா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் மா.யோகேந்திரன் உட்பட ஆலய பரிபாலன சபை மற்றும் கிராம அமைப்புக்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தின் சகல பாகங்களிலும் இருந்து கரப்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டனர்.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நெற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றபோது மட்/மமே/பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்று கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.