வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய பாற்குட பவனி

வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனி இடம்பெற்றது.

வீரமுனை ஆண்டியர் சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இந்த பாற்குட பவனி இடம்பெற்றது.

யானையின் பங்குபற்றலுடன் ஆயிரக்கணக்கானோர் புடை சூழ வெகுசிறப்பாக இந்த பாற்குட பவனி இடம்பெற்றது.

இந்த பாற்குட பவனியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) கலந்துகொண்டதுடன் அவருக்கு சிறப்பு கௌரவமும் அளிக்கப்பட்டது.

பாற்குட பவனியானது ஆலயத்திற்கு வந்ததுடன் ஆலயத்தில் சிறப்பு பூசையும் இடம்பெற்றது.