மண்டூரில் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி நெறி

(தவக்குமார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தினை     உள்ளடக்கிய பிரதேசங்களில் இளைஞர் யுவதிகளின்    எதிர்கால     நோக்கத்தினை    விருத்தி
செய்யும் வகையில்   வாழ்க்கைத்திறன்     மற்றும்   அறிவுத்திறன் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதன் கீழான செயலமர்வு மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் மண்டூர்  பிரதேசத்தை   சேர்ந்த   பல    இளைஞர்      யுவதிகள்       கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வானது வழிகாட்டல், தலைமைத்துவம் இளைஞர் சுகாதாரம் போன்றவற்றினை நோக்காக கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செயலமர்வுகளை நடாத்துவதற்கு வேலைத்திட்ட இணைப்பாளர் கிருபைராசா,வளவாளர் மகேந்திரராசா,சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் பலர் கலந்துககொண்டனர்.

கருத்தரங்கின்று இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.