மட்டக்களப்பு மாவட்டம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவுளிமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் மாடுகளைப் பராமரித்து வரும் சில பண்ணையாளர்கள் மீது அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றைய தினமும் பண்ணையாளர்கள் மீது வனவளத் திணைக்களத்தினரால் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மீண்டும் குறித்த பகுதிக்குச் சென்ற வனவளத் திணைக்களத்தினர் மற்றும் சில சிங்களவர்கள், பண்ணையாளர்கள் தமது மாடுகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்காக அமைத்திருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அகற்றி வருவதாகப் பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவ்வாறு உடைத்து அகற்றப்படும் பொருட்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது கால்நடைகளைப் பராமரித்து வரும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும், கால்நடைகளின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகக் காற்று மாசடைந்துள்ளதால், மட்டக்களப்பு மாவட்டப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இன்றைய தினம் (20) காலை மட்டக்களப்பு நகரில் அதிகளவான புகைமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காற்று மாசடைவதால் சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்துப் பயணங்களை மேற்கொள்ளும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், கட்டாயம் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்னீர் மீனவர்கள் ஆகியோர் தமது சுகாதாரம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
.jpeg)


.jpeg)
