முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

சம்மாந்துறையில் உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினருக்கு முதலுதவிப் பயிற்சி!


அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான புனித ஜோன் அம்புலன்ஸ் முதலுதவிப் பயிற்சி நெறி நேற்று (21) சனிக்கிழமை சம்மாந்துறை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில், உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.எம். பிரோஸ் தலைமையில் இப்பயிற்சி நெறி இடம்பெற்றது.

இதன்போது, விபத்துகள் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அத்தியாவசிய முதலுதவித் திறன்கள் தொடர்பாகப் பயிலுனர்களுக்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஏ.எம்.எம். பாரீஸ், புனித ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளரும் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் அதிகாரியுமான மேஜர் எம்.டி. நௌஷாட் வபி, புனித ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவின் சம்மாந்துறை மற்றும் இறக்காமம் பிரதேச அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹூசைன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

அத்துடன், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் ஏற்கனவே பயிற்சி பெற்ற உறுப்பினர்களான எம்.டி.எம். றிசாட், எஸ்.என். தில்சாத் பர்வீஸ், சக்கீப் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.