கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களுக்கும் அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை ‘அம்பர்’ எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (12) திங்கட்கிழமை அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
