தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு கராத்தே வீரர்களின் அசத்தல் சாதனை! தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று பிரதேசத்திற்கு பெருமை சேர்ப்பு


விளையாட்டு அமைச்சினால் கொழும்பு களனிப் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்ட 50ஆவது தேசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ‘ராம் கராத்தே-டோ’ (Ram Karate-Do) சங்க மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆலையடிவேம்பு வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

S. நவக்ஷன் – குமித்தே (Kumite) 84 கிலோகிராம் எடைப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.வெண்கலப் பதக்கம் – குழு கட்டா (Team Kata) P. Sharon Sachin ,S. Navakshan ,P. Mathanraj வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்

தேசிய விளையாட்டு அரங்கில் பதக்கங்களை வென்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ வீரர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்சியாளர்கள் மற்றும் ராம் கராத்தே-டோ சங்கத்தினருக்கும் பிரதேச மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.