சிறுவர் உரிமைகளை நினைவூட்டும் உலக சிறுவர் தினம் இன்று


உலக சிறுவர் தினம் இன்று (ஒக்டோபர் 1) சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாக இத்தினம் அமைந்துள்ளது.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான சூழல் போன்ற அடிப்படை உரிமைகளை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி, இணையவழித் துஷ்பிரயோகம், சமூக ஊடகச் சிக்கல்கள், சிறுவர் உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்வி சார்ந்த மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை இன்றைய சிறுவர்கள் எதிர்கொள்கின்றனர்.

எனவே, சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உலக சிறுவர் தினம் “மனவலிமை கொண்ட குழந்தைகள்; வலுவடையும் எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் மட்டு நியூஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.