மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், மாணவர்களின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் "விஞ்ஞான, சித்திரக் கண்காட்சி-2026" இன்று (12.10.2026) பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
"SCIENCE, INNOVATION, FUTURE" (அறிவியல், புதுமை, எதிர்காலம்) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற இக் கண்காட்சியில், பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான பரிசோதனைகள், ஆக்கங்கள் மற்றும் வர்ணமயமான சித்திரக் கலைப் படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
காலை 8.30 மணி முதல் மாலை 2.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பாடசாலையின் அதிபர் T. தயாபரன் தலைமை தாங்கினார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளரும், ம.தெ.எ.பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளருமான K. ரகுகரன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்து சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பின்வரும் கல்வித்துறைசார் பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்:
அதிதிகளின் உக்கமளிப்புடனும், ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் இடம்பெற்ற இக்கண்காட்சி, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், எதிர்கால விஞ்ஞானிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




.jpeg)





.jpeg)

.jpeg)

.jpeg)
