சர்வதேச குடியிருப்பு தினத்தை முன்னிட்டு,அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் தேசிய வீடமைப்பு திட்டங்களின் கீழ், திருக்கோவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 17 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், குறித்த வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், திருக்கோவில் பிரதேசத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வீடுகள் ஒப்பந்தக்காரர்களின் ஊடாக நிர்மாணிக்கப்படாமல், பயனாளிகளின் நேரடி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 10 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சின் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டில் திருக்கோவில் பிரதேசத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 44 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த 7 வீடுகளும் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தின் கீழ் 10 வீடுகளும், மீள்குடியேற்ற அமைச்சின் திட்டத்தின் கீழ் 7 வீடுகளுமாக மொத்தம் 17 வீடுகள் ஒரே நாளில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பெருமளவான வீடுகளை நிர்மாணித்து மக்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீடமைப்பு திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்,சமுகஅபிவிருத்தி சபை (பிரஜா சக்தி அமைப்புகளின் தலைவர்கள்) மற்றும் குறித்த கிராம சேவகர் பிரிவுகளின் கிராம சேவகர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வீடற்ற மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பானதும் நிலையானதுமான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு இத்திட்டங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)