செங்கலடி ராஜபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்: குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து ஆராய்வு!!


செங்கலடி (ஏறாவூர் பற்று) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜபுரம் கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் விஜயம் செய்து, கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சுத்தமான குடிநீர் விநியோகச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடித் தேவையான உடனடி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கிராமத்தின் வீதி அபிவிருத்தி, மின்சார வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை உட்கட்டமைப்புத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டு, அவற்றை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.