செர்பியாவுடன் வர்த்தகம், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அருண் ஹேமச்சந்திரா கலந்துரையாடல்


செர்பியாவுடன் வர்த்தகம், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அருண் ஹேமச்சந்திரா கலந்துரையாடல்.அணிசேரா இயக்கத்தின் 65ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்க செர்பியா சென்றுள்ள வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, செர்பிய வெளியுறவு அமைச்சக மாநில செயலாளர் நெவேனா ஜோவனோவிக் மற்றும் பொருளாதார அமைச்சக மாநில செயலாளர் ஆண்ட்ரிஜானா ஜோவனோவிக் ஆகியோரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தனியார் துறை தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.