இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு; முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்


இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (4) மாலை இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இந்தியா இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, தமிழ் பேசும் மக்களோடு தொடர்புடைய முக்கிய விடயங்கள், பேரவையின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் என்பன குறித்து பேரவையின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தனர்.

அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பிலும் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.