மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 25.08.2026 செவ்வாய்க் கிழமை இன்று காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
"வீட்டினை அடிப்படையாக கொண்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி " தொடர்பாக பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உ த்தியோகத்தர் திருமதி கே.விஷ்ணுகாந் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று உதவிபிரதேச செயலாளர் கி.இளங்குமுதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி. உமாரமணன் பங்குற்றினார். அத்துட ன் இந் நிகழ்வில் 65 முன்பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






