ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றம்


இராம பிரானால் வழிபடப்பட்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்ளது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 11ஆம் திகதி தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 12ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.