மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமைவாய்ந்த இடங்களையும் மறைந்துசெல்லும் இடங்களையும் அடையாளப்படுத்தி அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையிலான தீர்மானம் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 16வது அமர்வு இன்றைய தினம் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக இன்றைய அமர்வு நடைபெற்றது.
இன்றைய சபை அமர்வில் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டு,இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் சென்ற கூட்டறிக்கை சபை அனுமதி கோரப்பட்ட நிலையில் திருத்தங்களுடன் சபை அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநகரசபை முதல்வரின் தலைமையுரையுடன் முதல்வரின் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபை அனுமதி கோரப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் நிலையியல் குழுக்களினால் முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதுடன் சில தீர்மானங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்து நிறைவேற்றவும் சில தீர்மானங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்து பின்னர் சபையில் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய சபை அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் காணப்படும் இடங்களை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் மின்விளக்குகள் ஒளிராத பகுதிகளில் மின் விளக்குகளை பொருத்துதல்இமாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் அக்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இன்றைய தினம் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு வாவிக்குள் உல்லாசப்படகுச்சேவைக்கு உணவகம் ஒன்று அனுமதிகோரியுள்ள நிலையில் குறித்தஉணவும் படகினை வாங்கி வாவிக்குள் இறக்கிவிட்டு மாநகரசபையிடம் அனுமதி கோரியுள்ளதாக சில உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் பல்வேறு விடயங்கள் அதில் காணப்படுவதனால் முறையான கலந்துரையாடல்களை முன்னெடுத்து அனுமதிகளை வழங்குமாறு இங்கு வலியுறுத்தப்பட்டது.
இன்றைய சபை அமர்வில் திராய்மடு ஊடாக மட்டக்களப்பு போக்குவரத்துச்சபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இலங்கை போக்குவரத்துச்சேவையின் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் மாணவர்கள்,பொதுமக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் குறித்த பஸ்சேவையினை மீள ஆரம்பிக்க மாநகரசபையினால் கோரப்படவேண்டும் என்ற பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டது.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள எக்கோ பூங்கா எனப்படும் அழகிய கடற்கரை தீவுப்பகுதியை சுற்றுலா பகுதியாக புனரமைக்கவேண்டிய அவசியம் தொடர்பான பிரேரணையொன்று பிரதி முதல்வர் வை.தினேஸ்குமாரினால் கொண்டுவரப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மறைந்துசெல்லும் தமிழர்களின் பழமையான இடங்களை மீண்டும் இளம் சமூகத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மாநகரசபை முன்னெடுக்கவேண்டும் என இங்கு மாநகரசபை உறுப்பினர் து.மதனால் வலியுறுத்தப்பட்டது.

.jpeg)
.jpeg)

(1).jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)